01 July, 2009

ஜூலை ‘09 Top Ten தமிழ் InfoTech வலைப்பூக்கள்


மாற்றம் ஒன்றே நிலையானது என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். (Change is permanent). படிப்பவர்களின் விருப்பங்களையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு, அதற்கேற்றபடி எழுதுபவர்களுக்கே, தொடர்ந்து நல்ல ஆதரவு கிடைக்கும். இந்த பட்டியலை பார்த்தால் உங்களுக்கு விளங்கும்.

இந்த பட்டியல் உலக அளவிலான பட்டியல் என்பதை கருத்தில் கொள்ளவும்.

அலெக்ஸா Rankings 01.07.2009 தேதி காலை உள்ளவாறு.

1. டிவிஎஸ்50
Alexa Rank 234,950

2. தமிழ்நெஞ்சம்
Alexa Rank 251,137

3. பிகேபி
Alexa Rank 325,307

4. ::: தேன்தமிழ் :::
Alexa Rank 362,886

5. சைபர்சிம்மன்
Alexa Rank 373,295

6. கிரிகான்ஸ்
Alexa Rank 628,955

7. வேலன்
Alexa Rank 702,748

8. சுதந்திர இலவச மென்பொருள்
Alexa Rank 704,939

9. கணிணி மென்பொருட்களின் கூடம்
Alexa Rank 721,437

10. TamilTech.info
Alexa Rank 832,783

11. :::~TamilhackX~:::
Alexa Rank 934,276

12. பொன்மலர் பக்கம்
Alexa Rank 1,474,307

13. சூர்யா கண்ணன்
Alexa Rank 1,978,162

இருமொழி வலைப்பூக்களின் தரவரிசை (கீழ்க்கண்ட காரணங்களுக்காக தனி பட்டியல்)

1. TechinTamil.blogspot.com
Alexa Rank 472,228

2. Tamilwares.blogspot.com
Alexa Rank 866,827

பின்குறிப்பு:- Alexa.com குறிப்பிட்ட தேதிக்கு முந்தைய 3 மாதங்களை மட்டுமே ரேங்க் செய்ய கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இந்த பதிவில் ஏப்ரல், மே, ஜூன் 2009 மாதங்களின் Traffic Rank குறிப்பிடப்பட்டு உள்ளது.

யாருடையதாவது விட்டுப்போயிருந்தால் சொல்லுங்கள். சேர்த்துக்கொள்ளலாம். பிழைகள் ஏற்பட்டு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

விளக்கங்கள்

Pkp.in Vs. Pkp.blogspot.com

இந்த இரண்டில் pkp.blogspot.com-ஐ கணக்கில் எடுத்துக் கொள்வதுதான் சரி. நான் பார்த்தபோது பிகேபி தனது பக்கத்தில் Alexa Ranking Widget-ல் pkp.blogspot.com-தான் குறிப்பிட்டுள்ளார். pkp.in-ல் blog.pkp.in, wiki.pkp.in போன்ற நம் கணக்குக்கு சேர்க்கக்கூடாத subdomain-களின் traffic-ம் சேர்த்துக் கொள்ளப்படுவதால், pkp.in-ன் அலெக்ஸா ரேங்கிங் அதிகமாகத்தான் இருக்கும். நமக்குத் தேவை வலைப்பூ Ranking மட்டுமே.

இந்த விஷயம் தாமதமாகத்தான் தெரிந்தது. ஜூன் '09 மாத ரேங்கிங்கில் pkp.in-க்கு பதிலாக pkp.blogspot.com கணக்குக்கு எடுத்து இருந்தால் போன மாதம் தமிழ்நெஞ்சம்தான் டாப்.

இருமொழி வலைப்பூக்கள்

techintamil.blogspot.com, tamilwares.blogspot.com ஆகிய இரண்டும் ஒரே விஷயத்தை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் போடுகின்றன. தமிழில் போடுவது படமாக இருக்கும். இவற்றில் பதிவுகளின் தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கும். மேலும், தமிழில் இருக்கும் விஷயம் படமாக இருப்பதால், தேடுபொறிகளில் தமிழில் தேடும்போது கிடைக்காது. அதனால் பயன் குறைவுதான். இருந்தாலும் தமிழ் இருக்கும் காரணத்தால் தனி பட்டியலில் இடம் பெறுகின்றன.

இதில் tamilwares.blogspot.com கடந்த கடைசி மூன்று பதிவுகளை தமிழ் தலைப்பிட்டு, தமிழ் எழுத்துகளை படமாக போடாமல் எழுத்தாகவே போட்டு வருகிறது. இவ்வாறே தொடர்ந்தால் அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு வழக்கமான பட்டியலுக்கு கருத்தில் கொள்ளப்படும்.

தொழில்நுட்பம் சாரா பதிவுகள் ஏற்படுத்தும் பிரச்சனைகள்

தெரிந்தோ தெரியாமலோ, சினிமா சம்பந்தமான படங்கள், நடன வீடியோக்கள், ஆச்சரியமூட்டும் வீடியோக்கள், ஆங்கில பாடங்கள் இவற்றை சில தொழில்நுட்ப வலைப்பூக்களில் சேர்த்து விடுகிறார்கள்.

சினிமா பற்றிய பதிவை போட்டால் (like பிரபுதேவா யூடியுப் பென்னி லாவா ஆன கதை) கூட்டம் அதிகமாகத்தான் வரும். நிறைய டிராஃபிக் வந்து அலெக்ஸா ரேங்க் ஏறத்தான் ஏறும்.

Non-infotech பதிவுகளுக்கு எத்தனை hits வந்தது. அதனால் அலெக்ஸா ரேங்க் எவ்வளவு உயர்ந்தது என்பதை நம்மால் கண்டுபிடிக்க இயலாது. இந்த தொழில்நுட்பம் சாரா பதிவுகளின் effect அலெக்ஸா ரேங்க்கின் மீது போட்ட தேதியிலிருந்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு இருக்கும்.

இதனால் வெறும் தொழில்நுட்பம் எழுதுபவர்கள் மனது நொந்துபோக வாய்ப்புண்டு. அவர்களும் தங்களின் ரேங்க் உயர்த்த non-infotech பதிவுகளை போட ஆரம்பித்தால் என்ன ஆவது? இந்த பட்டியலுக்கே அர்த்தம், நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடும். யாருக்கும் பயனில்லை.

எடுத்துக்காட்டாக, இந்தப் பட்டியலில் ஏழாம் இடத்தில் இருக்கும் வேலனுக்கும், எட்டாம் இடத்தில் இருக்கும் எனக்கும் தரவரிசையில் குறைந்த அளவே வித்தியாசம் உள்ளது. அவரின் ஆங்கில பாட பதிவுகளின் ஹிட்ஸை கணக்கில் எடுக்காமல் விட்டுவிட்டால், எனக்கு ஏழாம் இடமே கிடைத்து இருக்கும் என் நான் நினைக்கலாம்.

யாரையும் non-infotech பதிவுகளை போடாதீர்கள் என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. வேண்டுமானால், மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை தவிர்க்க தன்னார்வ ஒத்துழைப்பு கோரலாம் (Voluntary compliance). அவ்வாறு செய்தால் அவர்களின் அலெக்ஸா ரேங்கிங் தரவரிசை சர்ச்சைக்கு உள்ளாகாது.

வாசகர்களிடம் தாம் பகிர்ந்துகொள்ள நினைக்கும் non-infotech பதிவுகளை வேறு வலைப்பூவில் போட்டு Link List Gadget-ல் சேர்த்துக் கொள்ளலாம், பிரச்சனைகளை தவிர்க்கலாம். பிகேபி இப்படித்தான் செய்கிறார்.

முதன்முறையாக இந்த விஷயத்தை focus செய்வதால் யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இந்த பட்டியலில் இருப்பவர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் அடுத்த மூன்று மாதங்களில் எந்தப் பிரச்சனையும் வராது.

மற்ற செய்திகள்

1. Thiratti.com-ல் தொழில்நுட்ப பதிவுகளுக்கு தனி பக்கம் போட்டு இருக்கிறார்கள். http://www.thiratti.com/technology-blog-post.php

2. தமிழ்மணத்தில் பதிவுகளை சேர்க்கும் முன் “தொழில்நுட்பம்” tag சேர்த்து submit செய்தால் இந்த பக்கத்தில் வரும் http://tamilmanam.net/tag/தொழில்நுட்பம்

3. cp-in.blogspot.com எழுதுபவர் தன் வயது 15 என்றும் 9th standard படிப்பதாகவும் தன் profile-ல் சொல்லி இருக்கிறார். வலைப்பூவைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை. அவர் clarify செய்வாரா?

4. loshan-loshan.blogspot.com இந்த பதிவை போட்டு நானும் தொழில்நுட்ப பதிவர் ஆகிவிட்டேன் என்று பெருமை கொள்கிறார். வாழ்த்துக்கள்.

5. tlbhaskar.blogspot.com கணக்கு பற்றிய பதிவுகளை முதன்மையாக எழுதி வந்தார். அவரின் முதல் தொழில்நுட்ப பதிவையே பாப்புலர் ஆக்கிவிட்டார்.

6. மீனாட்சி நாச்சியார் தொழில்நுட்பத்திற்காக தனியாக புதியதாக http://meenachiyar.blogspot.com ஆரம்பித்து இருக்கிறார்.

7. cadlearn.blogspot.com என்ற Autocad பற்றிய வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

8. தமிழ் கணிணி (http://t2fcomputer.blogspot.com) நான் புதிதாக அறிந்த ஒரு தொழில்நுட்ப வலைப்பூ.

11 Comments:

LOSHAN said...

அருமை.. நல்ல தொகுப்பு.. தேடிஎடுத்து விலாவாரியாக விபரங்கள் தந்துள்ளீர்கள்..

//4. loshan-loshan.blogspot.com இந்த பதிவை போட்டு நானும் தொழில்நுட்ப பதிவர் ஆகிவிட்டேன் என்று பெருமை கொள்கிறார். வாழ்த்துக்கள்.//

நான் சும்மா வேடிக்கைக்காக சொன்ன விஷயம் அது.. சீரியஸாக எடுக்காதீங்கண்ணே..
நாம எல்லாம் எப்பவாவது தான் இப்படி ஏதாவது 'விஷயம்' போடுவோம்..
தொழிநுட்பம் அப்பிடின்னு பெரிய லிஸ்டில கொண்டு வராதீங்கன்னே..

அப்பாவி தமிழன் said...

நண்பரே tamilwares தளம் இப்போது முற்றிலும் தமிழில் தான் வருகிறது , எழுதுவதற்கு முன்ன ஒரு முறை பார்த்திருக்கலாம்

தமிழ்நெஞ்சம் said...

Congrats for all the winners. Congrats to TVS50 and Loshan

வேலன். said...

தங்கள் கடின உழைப்புக்கும் தகவல் தொகுத்தமைக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

shirdi.saidasan@gmail.com said...

//
Blogger அப்பாவி தமிழன் said...

நண்பரே tamilwares தளம் இப்போது முற்றிலும் தமிழில் தான் வருகிறது , எழுதுவதற்கு முன்ன ஒரு முறை பார்த்திருக்கலாம்//

பார்த்துவிட்டுதான் இவ்வாறு எழுதினேன்.

//
இதில் tamilwares.blogspot.com கடந்த கடைசி மூன்று பதிவுகளை தமிழ் தலைப்பிட்டு, தமிழ் எழுத்துகளை படமாக போடாமல் எழுத்தாகவே போட்டு வருகிறது. இவ்வாறே தொடர்ந்தால் அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு வழக்கமான பட்டியலுக்கு கருத்தில் கொள்ளப்படும்.//

தமிழ் ஒரு எழுத்து தெரியாதவர்கூட ஆங்கிலம் தெரிந்தால் உங்கள் இருமொழி வலைப்பூவை படித்துவிட்டு போய்விடலாம். அவ்வாறு வரும் ஹிட்சால் வரும் ரேங்க்கை தமிழ் வலைப்பூக்கள் பட்டியலில் எப்படி சேர்ப்பது?

அதனால் உங்கள் வலைப்பூவை முழுக்க முழுக்க தமிழில் எழுதுபவர்களுடன் சேர்த்துக் கொள்வது நியாயம் இல்லை.

இருந்தாலும், அதில் தமிழில் நல்ல விஷயங்கள் நீங்கள் எழுதுவதால் அவை மக்களிடம் சென்றடைய, தனி பட்டியலில் சேர்த்து உங்களுக்கு exposure கொடுத்திருக்கிறேன்.

அந்த தனி பட்டியல் உங்கள் comment பார்த்த பிறகு சேர்த்தேன். அதை ஒத்துக்கொள்கிறேன்.

புதிய வலைப்பூ தமிழில் தொடங்குபவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை.

அலெக்ஸா கடந்த மூன்று மாத பதிவுகளை கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

கடந்த மூன்று மாதம் முழுக்க நீங்கள் தமிழில் எழுதி இருந்தால் இந்த பிரச்சனை இல்லையே.

கடந்த மூன்று மாதங்களில் மொத்த பதிவுகளில் வெறும் மூன்று பதிவுகள் மட்டுமே முழுக்க முழுக்க தமிழில். மற்றவை இருமொழியில். ஒத்துக் கொள்கிறீர்களா?

இப்போதே எடுத்துக் கொண்டால் அலெக்ஸா ரேங்க்கில் அந்த இருமொழி பதிவுகளின் தாக்கம் (Effect) நிச்சயம் தவிர்க்க முடியாது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு கடந்தகால இருமொழி பதிவுகளின் தாக்கம் அவ்வளவு இருக்காது. அப்போது எடுத்துக் கொள்ளலாம்.

தமிழில் தேடுபொறியில் தேடும்போது உங்கள் வலைப்பூ content கிடைக்காது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

இது எந்த ஒரு official லிஸ்ட்டும் இல்லை. அதனால் நீங்கள் வீணாக கவலைப்பட வேண்டாம்.

என்ன...Exposure இல்லாமல் போயிருக்கும். உங்கள் comment பார்த்து அதையும் கொடுத்துவிட்டேன்.

மேற்சொன்ன காரணங்கள் இருந்தும் உங்கள் நலம் காக்க முயன்று இருக்கிறேன்.

வடிவேலன் ஆர். said...

நன்றி ஒன்பதாம் இடம் கிடைத்துள்ளது. முனைப்புடன் ஊக்கத்துடன் எழுத ஒரு வெறு எழுகிறது. நன்றி நண்பரே
மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

கார்த்திக் said...

அருமையாக தொகுத்து தந்துள்ளீர்கள்.*+*நன்றி*+*

இல் ஒரு இலட்சத்துக்குள் வந்த தமிழ்நெஞ்சத்துக்கும் வாழ்த்துக்கள்.

(Honey Tamil)

பொன்மலர் said...

மிக்க நன்றி நண்பரே வாழ்த்துகள்
இந்த பதிவை பாருங்கள் .

http://ponmalars.blogspot.com/2009/07/blog-post.html

அப்பாவி தமிழன் said...

ok friend thanks for add my site again...here after i will continue to write in tamil .
thanks for your support

Anonymous said...

தமிழில் புதிய முயற்சிகள், தொழில் நுட்பம் குறித்த பதிவுகளை விவரமாக அறியத் தந்திருக்கிறீர்கள், நன்றி. தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

shirdi.saidasan@gmail.com said...

//பொன்மலர் said... மிக்க நன்றி நண்பரே வாழ்த்துகள்//

Everybody has selected themselves into the list.

அவ்வளவுதான்.

Post a Comment

Archives Monthwise